சுவிட்சர்லாந்து: ரூ.320 கோடிக்கு ஏலம் போன அரியவகை ‘புளூ டைமண்ட்’ வைரம்

சுவிட்சர்லாந்து: ரூ.320 கோடிக்கு ஏலம் போன அரியவகை ‘புளூ டைமண்ட்’ வைரம்
blue diamond
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஏல நிறுவனம் ஒன்றில் ‘புளூ டைமண்ட்’ என்ற அரிய வகை வைரம் இந்திய மதிப்பில் சுமார் 320 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2010ஆம் ஆண்டு தி கிராஃப் பிங் என்ற வைரம் 300 கோடிக்கு விலை போனதே இதுவரை அதிக மதிப்பில் ஏலம் போனதாக இருந்த நிலையில், இந்த சாதனையை ‘புளு டைமண்ட்’ முறியடித்துள்ளது.

ஹாங்காங்கில் வசிக்கும் சீன தொழிலதிபர் இந்த அரிய வகை புளு டைமண்ட் வைரத்தை ஏலம் எடுத்தார். கடந்த 250 வருட கால ஏல வரலாற்றில் இதுபோன்ற வைரம் மொத்தம் மூன்று மட்டுமே ஏலம் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நீல நிறத்தில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தத இந்த வைரக்கல் 29.6 காரட் மதிப்புடையது. ப்ரிடோரியா (PRETORIA) நகருக்கு அருகேயுள்ள கல்லினன் (CULLINAN) வைரச் சுரங்கத்தில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் தோண்டி எடுக்கப்பட்டது.

இதேபோல் இளஞ்சிவப்பு நிறத்தில் அரிய வகையான மோதிரத்தில் பதிக்கபட்ட வைரக்கல் ஒன்று ரூ.186 கோடிக்கு ஏலம் போனது.

Leave a Reply