சென்னை ஜி.எஸ்.டி. சாலையில் படகுப் போக்குவரத்து. மிதக்கும் சென்னை நகரம்
[carousel ids=”76012,76011,76010″]
சென்னை சாலைகளில் பஸ், லாரி ஓடித்தான் இதுவரை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் முதல்முறையாக பிசியான ஜி.எஸ்.டி சாலையில் படகுப்போக்குவரத்து இயங்கியுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இருசக்கர, நான்கு சக்கர வாகங்கள் செல்ல முடியாத அளவுக்கு சில இடங்களில் தண்ணீர் இரண்டு அடிக்கும் மேல் சாலைகளில் தேங்கியுள்ளது.
இந்நிலையில் ஜி.எஸ்.டி சாலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க மீட்புக்குழுவினர் படகின் உதவியை நாடியுள்ளனர். படகுகளின் உதவியால் மழைநீரில் சிக்கி தவித்த மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகாலட்சுமி நகரில் இருந்து கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி சாலையில் பொதுமக்களை மீட்டு படகு மூலம் மீட்டு வரும் காட்சியை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
English Summary: Boat service in Chennai Roads