ஹிலாரி-டிரம்ப். அதிபர் வேட்பாளருக்கு யார் சரியானவர். போட்டியில் இருந்து விலகிய பாஜிண்டால் பேட்டி
இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், லூசியானா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான பாபி ஜிண்டால் அமெரிக்க அதிபர் வேட்பாளராக குடியரசு கட்சி சார்பாக களமிறங்கினார். ஆனால் மக்கள் அவருக்கு போதிய ஆதரவு அளிக்காததால், டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு வழிவிட்டு போட்டியில் இருந்து ஒதுங்கினார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்த பாபி ஜிண்டால் ‘அமெரிக்க அதிபர் பதவிக்கு ஹிலாரி கிளிண்டனை விட டிரம்ப் மேலானவர். ஆனால் டிரம்ப் மிகச்சரியான தேர்வு என்று கூறமாட்டேன். இருப்பினும் குடியரசு கட்சி சார்பாக அவர் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டால் அவருக்கு தான் நான் வாக்களிபேன்.
நான் என் கட்சியின் வேட்பாளரை தான் ஆதரிப்பேன். ஆனால் அதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. ஹிலாரியா? டிரம்பா? என்ற ஒரு நிலை வந்தால் கண்டிப்பாக நான் டிரம்ப்பை தான் தேர்வு செய்வேன்’ என்று கூறியுள்ளார்.