ஆணுக்கும் பெண்ணுக்கும் நடப்பதுதான் திருமணம். இதை எந்த கோர்ட்டும் மாற்ற முடியாது. பாபிஜிண்டால்

bobby jindalஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ்வதுதான் இயற்கை. இதற்கு மாறாக ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து வாழும் திருமண உறவுமுறைக்கு அமெரிக்க உச்சநீதிமன்றமும், அமெரிக்க அரசும் அனுமதி வழங்கியுள்ளது இயற்கைக்கு முரணானது என அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள இந்திய அமெரிக்கரான பாபி ஜிண்டால் ஆவேசமாக கூறியுள்ளார்.

ஒரே பாலின திருமண உறவை அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் போன்ற முன்னணி தலைவர்கள் வரவேற்றுள்ள நிலையில் பாபிஜிடாலின் எதிர்ப்பு அமெரிக்கர்களை ஆச்சரியப்படுத்தியுடன் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, நேற்று பாபிஜிண்டால் அமெரிக்க தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது: அதிபர் ஒபாமாவும், ஹிலாரி கிளிண்டனும் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் தங்களது கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டை போலவே இவர்களும் கருத்துக் கணிப்பை வாசிப்பதில் அக்கறை காட்டுகின்றனர்.

என்னைப் பொருத்தவரை கிறிஸ்துவ மத நம்பிக்கையின்படி, திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமானது. இதை எந்த கோர்ட்டின் தீர்ப்பும் மாற்றிவிட முடியாது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply