பாபிசிம்ஹா-ரேஷ்மி மேனன் திருமணம். திருப்பதியில் இனிதே நடந்தது.
பீட்சா, ஜிகர்தண்டா, நேரம், உறுமீன், பெங்களூர் நாட்கள் உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் பாபிசிம்ஹா, ஜிகர்தண்டா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதினையும் பெற்றார். இந்நிலையில் ‘உறுமீன்’ என்ற படத்தில் நடித்தபோது, அந்த படத்தின் நாயகி ரேஷ்மா மேனனுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாபிசிம்ஹா-ரேஷ்மாமேனன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில் பாபிசிம்ஹா-ரேஷ்மா மேனன் திருமணம் இன்று இனிதே திருப்பதி கோவிலில் நடந்தது. இந்த திருமணத்திற்கு கோலிவுட் திரையுலகினர் பலர் கலந்து கொண்டு நட்சத்திர தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பாபிசிம்ஹா நடித்த ‘கோ 2’ மற்றும் ‘இறைவி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் அவர் ‘பாம்புச்சட்டை’, மெட்ரோ, வல்லவனுக்கு வல்லவன், கவலை வேண்டாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
Chennai Today News: Bobby simha – Reshmi Menon marriage in Tirupathi