பாகிஸ்தான் தேர்தலின்போது வெடித்த வெடிகுண்டு: 25 பேர் பலி

பாகிஸ்தான் தேர்தலின்போது வெடித்த வெடிகுண்டு: 25 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் சாதாரணமாகவே வெடிகுண்டு வெடிக்கும் நிகழ்வு என்பது சர்வசாதாரணமாக நடைபெறும் ஒன்று. இந்த நிலையில் இன்று அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமாக இன்று காலை முதல் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அந்நாட்டில் உள்ள குவெட்டா என்ற நகரில் சற்றுமுன்னர் பயங்கர சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள முக்கிய பகுதியான பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் குண்டு வெடித்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் முதல்கட்ட செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இன்று பதிவான வாக்குகள் இரவோடு இரவாக எண்ணப்பட்டு நாளை காலைக்குள் பாகிஸ்தானின் புதிய அதிபர் யார்? என்பது தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply