திருவண்ணாமலை கோவிலுக்கு பெட்ரோல் குண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு
தமிழகத்தின் முக்கிய ஆன்மீக தலமான திருவண்ணாமலை கோவிலின் மீது பெட்ரோல் குண்டு வீசப்படும் என மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக திடுக்கிடும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. இதுகுறித்து அண்ணாமலியார் கோயில் இணை ஆணையர் ஜெகன்நாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் அண்ணாமலையார் கோயிலுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.