சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். பெரும் பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். பெரும் பரபரப்பு

centralகடந்த ஆண்டு மே மாதம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்து பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மரணம் அடைந்த அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் இன்று சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில்  மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அந்த வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டியுள்ளான்

இதையடுத்து ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ரெயில் நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எந்தவித வெடிபொருட்களும் ரயில் நிலையத்தில் இல்லை என்றும், அந்த தொலைபேசி அழைப்பு ஒரு வதந்தி என்றும் தெரியவந்தது. இருப்பினும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply