பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளின் சொத்துக்கள் பறிமுதல்: மும்பை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
பெற்றோரை சரிவர கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று சமூகநலத் துறை அமைச்சர் வி.சரோஜா அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பெற்றோரை சரியாக பிள்ளைகள் கவனிக்கவில்லை என்றால் பெற்றோர் அளித்த சொத்துக்களை திரும்ப பெற பெற்றோர்களுக்கு உரிமை உண்டு என்று மும்பை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
மும்பை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, ‘பெற்றோர் மற்றும் முதியவர்கள் பராமரிப்பு சட்டத்தை சுட்டிக்காட்டி மகன் முறையாகக் கவனிக்கத் தவறினால் அவருக்கு கொடுத்த சொத்துகளை திரும்பப்பெற பெற்றோருக்கு உரிமையுண்டு என தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளைய சமுதாயத்தினர் தங்களின் வயதான தாய், தந்தையரையும், பிற உறவினர்களையும் அன்போடும், பரிவோடும் கவனித்து கொள்ள வேண்டும் என்றும், இது அவர்களது தலையாய கடமை என்றும் இந்த கடமையை செய்ய தவறுபவர்கள் பரம்பரை சொத்துக்களை இழக்க வேண்டிய நிலை வரும் என்றும் இதன்மூலம் தெரியவருகிறது.