மேகி நூடுல்ஸ் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது. மும்பை நீதிமன்றம் தீர்ப்பு

maggiகடந்த சில நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான ரசாயனம் கலந்திருப்பதாக ஆய்வுகளின் மூலம் நிரூபணம் ஆனதால் தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்க கோரி மேகி நூடுல்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த மும்பை உயர் நீதிமன்றம் தடையை நீக்க மறுத்துவிட்டது.

தங்கள் நிறுவன உணவுப்பொருளுக்கு ஒருசில மாநிலங்களும், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையமும் விதித்த தடையை நிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நெஸ்லே இந்தியா நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவில், ”மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் கடந்த 5ஆம் தேதி மேகி நூடுல்ஸ்க்கு தடை விதித்தது. அதேபோல், மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை 6ஆம் தேதி தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய உத்தரவிடவேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும், மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை திரும்ப பெறும் பணியையும் தொடர்ந்து செய்து வருகிறோம். இந்த நடவடிக்கையால் அதில் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என்றும், இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை பின்பற்றுவோம் என்றும் நெஸ்லே இந்தியா தெரிவித்துள்ளது. இம்மனுவை விசாரணை செய்த மும்பை உயர் நீதிமன்றம், மேகி நூடுல்ஸ்க்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டது.

Leave a Reply