சென்னை ரோஹினி திரையரங்கில் போனிகபூர்: வைரல் வீடியோ!

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் அதிகாலை 4 மணி காட்சியை பார்ப்பதற்கு தயாரிப்பாளர் போனிகபூர் சென்னை ரோஹினி திரையரங்கிற்கு வந்தார்

போனிகபூரை பார்த்ததும் அவரை சுற்றி ரசிகர்கள் வெள்ளம் சூழ்ந்தது. அவருடைய காருக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

இந்த நிலையில் தியேட்டர் நிர்வாகிகள் பாதுகாப்பாக அவரை தியேட்டருக்கு அழைத்துச் சென்றனர். ரசிகர்களின் உற்சாக வரவேற்பு போனி கபூரை நெகிழ செய்ததாக கூறப்படுகிறது