ரயில் டிக்கெட்டை மாற்றி முன்பதிவு செய்துவிட்டீர்களா? கவலை வேண்டாம்
ஆன்லைனில் ரயில் பயண டிக்கெட்டில் தவறுதாக ஊரின் பெயரைமாற்றி பதிவு செய்துவிட்டீர்களா? கவலை வேண்டாம், அதற்கு ஒரு வழி ஐஆர்சிடிசி இணையதளத்தில் உள்ளது.
நீங்கள் பயணம் செய்யவுள்ள ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக ஆன்லைனில் புறப்படுமிடம் (போர்டிங் பாயின்ட்) மாற்ற வேண்டும். உதாரணத்துக்கு நீங்கள் சென்னையில் இருந்து மதுரை செல்ல திட்டமிட்டிருக்கிறீர்கள். ஆனால், போர்டிங் பாயின்டாக குறிப்பிட்டிருந்த எழும்பூருக்குப் பதில் செங்கல்பட்டிலிருந்து ஏற விரும்புகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் ஒருவேளை டிக்கெட் பரிசோதகர் நீங்கள் வரவில்லை என டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டால் உங்கள் இருக்கை மற்றொருவருக்குச் சென்றுவிடும். இதை தவிர்க்க பயணத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக நீங்கள் போர்டிங் பாயின்ட்டை மாற்றிவிட்டால் உங்கள் இருக்கை பத்திரமாக இருக்கும்.
நீங்கள் போர்டிங் பாயின்ட்டை மாற்ற விரும்பும்போது, ஐஆர்சிடிசி தளத்துக்குச் சென்று Booked Ticket History என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் Change Boarding Point என்பதை செலக்ட் செய்து நீங்கள் ஏற விரும்பும் இடத்தை அதில் குறிப்பிடவும். ஆனால், இதுமாதிரியாக ஒருமுறை மட்டுமே இடத்தை மாற்ற முடியும். அதேபோல், நீங்கள் ஏறுமிடத்தை மாற்றியதற்கான சான்றை கையில் வைத்துக்கொள்ளவேண்டும் இல்லாவிட்டால் அபராதம் செலுத்த நேரிடும். அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகையின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் ஏறுமிடத்தை மாற்ற இயலாது.