மூன்று நாள் இந்திய சுற்றுப்பயணம் செய்து வரும் சீன அதிபரிடம், எல்லை பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியதி தொடர்ந்து இந்திய எல்லையில் இருந்த சீன ராணுவத்தை உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு சீன அதிபர் உத்தரவிட்டார். இதற்கு இந்திய அரசு சார்பில் பிரதமர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
காஷ்மீர் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியான லடாக்கில் அமைந்துள்ள சுமர் என்ற கிராமத்திற்குள் சீன ராணுவத்தினர் கடந்த நில நாட்களாக அத்துமீறி முகாமிட்டு இருந்ததால் இருநாட்டு எல்லையில் பதட்டம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் இந்திய ராணுவத்தினர் அதிரடியாக குவிக்கப்பட்டதால் பதட்டம் மேலும் அதிகரித்தது. இந்தியா வந்துள்ள சீன அதிபர் பிரதமர் மோடியை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, எல்லை பிரச்னை குறித்து இரு தலைவர்களும் பேசினர். இந்திய எல்லையில் இருக்கும்சீன முகாம்களை வாபஸ் பெற மோடி கேட்டுக்கொண்டதை அடுத்து சீன அதிபர் உடனடியாக தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்..
சீன அதிபரின் உத்தரவைதொடர்ந்து நேற்று இரவு 9.45 மணிக்கு சீன ராணுவத்தினர் அவர்களது எல்லைக்குட்பட்ட பகுதிக்கு திரும்பிச் செல்ல ஆரம்பித்தனர். இதையடுத்து அங்கு குவிக்கப்பட்டிருந்த இந்திய ராணுவத்தினரின் எண்ணிக்கையும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.