எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 346 விளையாட்டு வீரர்களுக்கான கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: எல்லைப் பாதுகாப்பு படை
காலியிடங்கள்: 346
பணி: கான்ஸ்டபிள் (GD)
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட விளையாட்டு பிரிவில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2000
வயதுவரம்பு: ஆகஸ்ட் 1.2015 தேதியின்படி 18 – 23க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bsf.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Commandant
25Bn BSF, Chhawla Camp,
Post office-Najafargh,
New Delhi-110071
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.10.2015
மேலும் விண்ணப்பதார்களின் சந்தேகங்களுக்கான முழுமையான விவரங்கள் அறிய www.bsf.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.