ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படம் கடந்த 2011ஆம் ஆண்டில் ரிலிஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை எம்.ராஜேஷ் இயக்கியிருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஆர்யா முடிவு செய்துள்ளார்.
பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகத்தில் ஆர்யா, நயன்தாராவுடன் தமன்னாவும் நடிக்கிறார். இந்த படத்திலும் வழக்கம் போல சந்தானம் காமெடி கேரக்டரில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் இசையை ஹாரீஸ் ஜெயராஜ், மற்றும் முதல் பாகத்தில் வேலை செய்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இதில் பணிபுரிய உள்ளனர்.
இந்த படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் என்ற நிறுவனமே தயாரிக்கிறது. தமன்னா முதல்முறையாக ஆர்யாவுடன் ஜோடி சேருகிறார் என்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது. நயன்தாராவும், தமன்னாவும் போட்டி போட்டுக்கொண்டு ஆர்யாவை காதலிப்பது போன்றும் கடைசியில் யார் வெற்றி பெறுகிறார்கள், யார் விட்டுக்கொடுக்கின்றார்கள் என்பதுதான் கதை. ராஜேஷ் இந்த படத்திற்கான முழு திரைக்கதையையும் முடித்துவிட்டார். வரும் மே மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.