ரஷ்யாவில் ஒருவர் பாட்டில்களை கொண்டு வீடு ஒன்றை கட்டி சாதனை செய்துள்ளார். அந்த வீட்டை பார்க்க தினமும் ஏராளமானோர் குவிந்து வருவதாக அந்த பகுதியில் இருந்து தகவல்கள் வெளிவருகின்றன.
ரஷ்யாவில் உள்ள செல்யாபின்ஸ்க் (Chelyabinsk) என்ற நகரை சேர்ந்த 52 வயது ஹமிதுலா இல்செபேவ் என்பவர் சமீபத்தில் கட்டிய வீட்டின் பெரும்பகுதி பாட்டில்களால் ஆனவை. இவர் தினசரி இரண்டு முதல் ஐந்து பீர்கள் வரை குடிக்கும் பழக்கம் உடையவர் என்றும் இவர் குடித்து விட்டு காலியான பாட்டில்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததை அடுத்து அவருக்கு இந்த ஐடியா வந்ததாகவும், பின்னர் அவர் தனது சிவில் எஞ்சினியர் நண்பர் ஒருவருடன் கலந்து ஆலோசித்து காலி பாட்டில்களால் ஆன இந்த வீட்டை கட்டியதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இவருடைய வீட்டை பார்க்க தினமும் நூற்றுக்கணக்கில் அப்பகுதி மக்கள் செல்வதாகவும், அந்த பகுதியின் ஒரு சுற்றுலா ஸ்தலம் போல இந்த வீடு மாறிவிட்டதாகவும் அந்த பகுதியில் உள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.,