ஆசிரியரை அம்பு எய்தி கொலை செய்த மாணவன். ஸ்பெயினில் அதிர்ச்சி சம்பவம்

spainஸ்பெயின் நாட்டில் 14 வயது கூட நிரம்பாத பள்ளி மாணவன் ஒருவன் வகுப்பறையில் ஆசிரியரை வில் அம்புவினால் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஸ்பெயின் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் உள்ள பள்ளியின் வகுப்பறையில் பாடம் நடத்த ஆசிரியர் நுழைந்தார். அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தபோது அந்த வகுப்பறையில் இருந்த மாணவன் ஒருவன் தனது புத்தகப்பையில் இருந்த வில் அம்புவை எடுத்து ஆசிரியர் மீது சரமாரியாக அம்புகளை எய்தான். அம்புகள் மிக கூர்மையாக இருந்ததால் அந்த ஆசிரியர் வகுப்பறையிலேயே துடிதுடித்து மரணம் அடைந்தார். இந்த சம்பவத்தில் மேலும் சில மாணவர்கள் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மாணவனின் புத்தகப்பையை சோதனை செய்தனர். அதில் வில் அம்புகளூம், வெட்டுக்கத்தியும் இருந்தது. ஆனால் அந்த மாணவனுக்கு இவையெல்லாம் பயங்கர ஆயுதம் என்பது தெரிந்திருக்கவில்லை.

மேலும் அவனிடம் விசாரணை செய்த போலீஸார் அந்த மாணவன் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவனை மனநல ஆஸ்பத்திரியில் அனுமதித்து பரிசோதனை நடத்தி வருகின்றனர். ஆசிரியரை கொன்ற மாணவன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். ஏனெனில் அவனுக்கு இன்னும் 14 வயது ஆகவில்லை. ஸ்பெயின் நாட்டு சட்டப்படி 14வயதுக்கு மேல் உள்ளவர்கள் மீது மட்டுமே கிரிமினல் வழக்கு தொடுக்க முடியும்.

Leave a Reply