குட்டைப்பாவாடை அணிந்த மாணவர்கள்: அலறி அடித்து ஓடிய மாணவிகள்

குட்டைப்பாவாடை அணிந்த மாணவர்கள்: அலறி அடித்து ஓடிய மாணவிகள்

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் ட்ரவுசர் அணிய மாணவர்களுக்கு நிர்வாகம் தடை விதித்ததால் பெண்கள் அணியும் குட்டைப் பாவாடையை கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவர்களை குட்டை பாவாடையுடன் பார்த்த மாணவர்கள் அல|றி அடித்து வகுப்புகளுக்குள் ஓடிய காட்சி பரிதாபமாக இருந்தது

இங்கிலாந்தில் உள்ள ஒரு பள்ளியில் ட்ரவுசர் அணிய மாணவர்களுக்கு நிர்வாகம் தடை விதித்ததால் பெண்கள் அணியும் குட்டைப் பாவாடையை கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் எக்சிடர் நகரில் தற்போது வெப்பமான காலநிலை நிலவுவதால் அங்குள்ள பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் ட்ரவுசர் அணிந்து பள்ளிக்கு வந்தனர். ஆனால், அவர்களை பள்ளி நிர்வாகம் கண்டித்ததோடு, ட்ரவுசர் அணிந்து பள்ளிக்கு வர தடை விதித்து நடவடிக்கை எடுத்தது

பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பல மாணவர்கள், “ வெப்பமான சூழல் நிலவும் போது பேண்ட் அணிந்து வகுப்பறையில் அமர்வது அசவுகரியமாக உள்ளது. இதனால், ட்ரவுசர் அணிந்து பள்ளிக்கு வந்தோம். ஆனால், நிர்வாகம் அதற்கு அனுமதிக்க வில்லை” எனக் கூறி பெண்கள் அணியும் குட்டைப் பாவாடையை அணிந்து பள்ளிக்கு வந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். குட்டைப்பாவாடையுடன் மாணவர்களை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து வகுப்பறையில் இருந்து வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் எதிர்ப்பை அடுத்து அப்பள்ளியின் தலமை ஆசிரியர்,” இந்தப் பள்ளியின் சீருடையில் ட்ரவுசர் இல்லை. எனினும் மாணவர்களின் போராட்டம் குறித்து அனைவரிடமும் பேசி முடிவெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply