இதுவரை கண்டுபிடிக்கப்படாத மனித உறுப்பு. அயர்லாந்து விஞ்ஞானியின் சாதனை

இதுவரை கண்டுபிடிக்கப்படாத மனித உறுப்பு. அயர்லாந்து விஞ்ஞானியின் சாதனை

மனித உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் அறிந்து ஆராய்ச்சி செய்துள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் மனித உடலில் ஒரு புதிய உறுப்பு இருப்பதை அயர்லாந்து உடற்கூறியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உறுப்பை இதுவரை எப்படி ஆய்வாளர்கள் கண்டுபிடிக்காமல் இருந்தனர் என்பது ஆச்சரியத்தை தருகிறது

நடுபடிப்பு (Mesentery)  என்று கூறக்கூடிய இந்த உறுப்பு மனித உடலில் குடல் பகுதியை வயிற்றுடன் இணைக்கும் பகுதியாக உள்ளது. மனித இனம் தோன்றி இத்தனை ஆண்டு காலமாக பல்வேறு திசுக்கள் ஒன்றிணைந்த ஒரு அமைப்பாகவே இந்த உறுப்பு கருதப்பட்டு வந்தது.

ஆனால் அயர்லாந்தை சேர்ந்த லிமெரிக் பல்கலைக்கழகத்தின் ஜெ.கேல்வின் காஃப்பே என்ற ஆய்வாளர், வயிற்றின் நடுமடிப்பு பகுதியானது, தொடர்ச்சியான உள்கட்டமைப்பினை கொண்ட இந்த அமைப்பு மனித உடலின் தனிஉறுப்பு என்பதை உறுதி செய்துள்ளார். .

மற்ற உடலில் உள்ள மற்ற உறுப்புகளை போல் இதனை அணுகும் போது, இந்த உறுப்பு தொடர்பான  நோய்களை வகைப்படுத்தி, அவற்றை குணப்படுத்துவது எப்படி என்ற ரீதியில் அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.

உடலில் புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுமடிப்பு என்ற இந்த உறுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவிற்கேற்ப, இந்த புதிய உறுப்பின் இயக்கம் குறித்து இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள முடியும்.

இதன் இயக்கம் குறித்த தகவல்கள் அறிந்து கொள்ளும்பட்சத்தில் வயிறு மற்றும் குடல் பகுதி சார்ந்து பல்வேறு நோய்களை எளிமையாக குணப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply