பின்னழகு அறுவை சிகிச்சை செய்த பெண் பலி: டாக்டர் தப்பி ஓட்டம்
பிரேசில் நாட்டில் பின்னழகை பொலிவூட்டும் வகையில் அறுவை சிகிச்சை செய்த பெண் எதிர்பாராமல் சிகிச்சையின்போது பலியானார். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த அறுவை சிகிச்சை செய்த டாக்டர் தலைமறைவாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பிரேசில் நாட்டில் 46 வயது பெண் ஒருவர் தனது பின்னழகை பெரிதாக்கி பொலிவுடையதாக்க டேனிஸ் என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். அந்த பெண்ணுக்கு டேனிஸ் சில ஊசிகளை போட்டு அதன் பின்னர் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
ஆனால், எதிர்பாராத விதமாக மருந்து ஒவ்வாமையால் அந்த பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் டேனிஸ் தலைமறைவாகிவிட்டதாகவும், அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.