பிரேசில்: மேல்முறையீடு செய்த அதிபருக்கு கூடுதல் தண்டனை கொடுத்த நீதிபதி
பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் ஊழல் வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டார். தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மேல்முறையீடு செய்த அவருக்கு கூடுதல் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டில் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை அதிபராக பதவியில் இருந்த லூயிஸ் இனாசியோ என்பவர் மீது சட்டவிரோத பணமாற்றம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஒன்பது ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கியது
இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், அவருக்கு 12 ஆண்டுகள் தண்டனை என சிறைத்தண்டனையை நீட்டித்து தீர்ப்பளித்துள்ளது. இதனால் முன்னாள் அதிபர் லூயிஸ் அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.