பிரேசில் நாட்டில் சொந்தமாக நிலமில்லா பணியாளர் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் சுமார் 15,000 பேர், அரசு சமீபத்தில் ஏற்படுத்திய சீர்திருத்த சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அரசு பிரதிநிதிகளிடம் மனு அளிக்க போராட்டக்குழுவினர் சென்றனர். ஆனால் அவர்களுக்கு போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
போலீஸாருக்கும் போராட்டக்கார்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை வீசியதால் பதிலுக்கு போராட்டக்காரர்கள் கற்களை வீசியதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. மேலும் போராட்டத்தின் உச்சகட்டமாக, உச்சநீதிமன்றத்தை கைப்பற்ற வன்முறையாளர்கள் முயற்சித்தனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் 22 போலீசாரும், 30 போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். இந்த போராட்டத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த ஒரு பத்திரிகையாளர் பரிதாபமாக பலியானார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.