பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முதல் காலிறுதி ஆட்டம் தொடங்கியது. முதல் நாள் நடந்த இரண்டு போட்டிகளில் ஜெர்மனி மற்றும் பிரேசில் அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த இரு அணிகளும் வரும் 8அம் தேதி அரையிறுதியில் மோத இருக்கின்றன.
நேற்று இரவு ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த விறுவிறுப்பான போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் அதிர்ஷ்டவசமாக கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திய ஜெர்மனியின் டோனி க்ரூஸ் மிக அபாரமாக ஒரு கோல் போட்டார். இந்த கோலுக்கு பதிலடி கொடுக்க பிரான்ஸ் அணிக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் ஜெர்மனியின் கோல்கீப்பர் மிக அபாரமாக பந்தை தடுத்து மிக அபாரமாக விளையாடினார். பின்னர் ஆட்டமுடிவில் ஜெர்மனி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அதிகமுறை அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணி என்ற பெருமையை மீண்டும் தக்கவைத்துக்கொண்டது.
இதே போன்று இன்று அதிகாலை நடந்த மற்றொரு போட்டியில் பிரேசில் அணி கொலம்பியாவுடன் மோதியது. உலகக்கோப்பையில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற பிரேசில் அணியின் அபார ஆட்டத்திற்கு கொலம்பிய அணி வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து பிரேசில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார் அந்த அணியின் நட்சத்திர வீரர் தியாகோ சில்வா. மேலும் இந்த போட்டியில் பிரேசில் வீரர்களின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
முதல் பாதியின் முடிவில் பிரேசில் அணி 1-0 என்ற கோல்கணக்கில் இருந்தபோது ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திய டேவிட் லூயிஸ் இரண்டாவது கோல் போட்டு அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் கொலம்பியா அணிக்கு கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணியின் ரோட்ரிகஸ், அபாரமான கோல் ஒன்றை போட்டார். இருப்பினும் இறுதியில் பிரேசில் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.