தாய்ப்பாலில் குளியல் சோப். அமெரிக்க பெண்ணின் புதிய முயற்சி

[carousel ids=”65628,65629,65630″]

பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய இன்றியமையாத உணவுப்பொருளான தாய்ப்பாலில் ஏற்கனவே பலவித பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள ஒரு பெண், தாய்ப்பாலில் குளியல் சோப் தயாரித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா என்ற நகரை சேர்ந்த ஆண்ட் டினா என்ற பெண், தாய்ப்பாலில் குளியல் சோப் தயாரித்து அதை $60 என்ற விலைக்கு விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

14 அவுன்ஸ் தாய்ப்பாலில் தேங்காய் எண்ணெய், ஆலிவர் ஆயில், கேஸ்டர் ஆயில், பாமாயில், சோயாபீன்ஸ் ஆயில் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை கலந்து ஐந்து வாரங்கள் பாடம் செய்து அதன்பின்னர் அதில் இருந்து சோப் தயாரிப்பதாக ஆண்ட் டினா கூறியுள்ளார். தாய்ப்பாலை விரும்பாத நபர்களுக்கு இவர் ஆட்டுப்பால் கலந்தும் சோப் செய்து வருகின்றார்.

இவர் தயாரிக்கும் சோப்பிற்கு அந்த பகுதியில் நல்ல மார்க்கெட் இருப்பதாகவும் விரைவில் தன்னுடைய சோப் உற்பத்தியை அதிகரிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாய்ப்பால் சோப் உபயோகப்படுத்துவதால் பல்வேறு சரும நோய்களிடம் இருந்து விடுதலை பெறலாம் என்று இவர் கூறியுள்ளார்.

Leave a Reply