இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மிடில்ஸ்பரோ என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது திருமண உடைக்காக சுமார் 200 மணி நேரம் செலவு செய்து ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் செலவு செய்து திருமண கவுன் ஒன்றை தயாரித்துள்ளார்.
மிடில்ஸ்பரோ நகரை சேர்ந்த 24 வயது செரில் மெக்ஜில் என்ற இளம்பெண் ஒரு உடையலங்கார நிபுணராக பணிபுரிந்து வருகிறார். மற்றவர்களின் திருமணத்திற்கே விதவிதமாக உடைகள் தயாரித்து கொடுத்த செரில் தன்னுடைய திருமணத்திற்கு மிக பிரமாண்டமான உடை ஒன்றை தயாரிக்க முடிவு செய்தார்.
சுமார் 200 மணி நேரம் செலவு செய்து மிஷின்கள் உதவியின்றி கையாலேயே மிகவும் பிரமாண்டமாக ஒரு உடையை தயார் செய்தார். இந்த உடையின் மதிப்பு சுமார் ரூ.1,10,000 ஆகும். இந்த உடைக்காக அவர் 22000 வாத்துக்களின் இறகுகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
திருமணத்தன்று அவர் அணிந்திருந்த உடை அனைவராலும் வரவேற்கப்பட்டதுடன் சமூக இணையதளங்களிலும் இந்த உடை குறித்து விவாதம் நீண்ட நேரம் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.