சவப்பெட்டியில் வந்த மணமகள். இங்கிலாந்தில் அதிர்ச்சி சம்பவம்.

[carousel ids=”65176,65177,65178,65179,65180″]

பொதுவாக திருமணத்திற்கு வரும் மணப்பெண் மற்றும் மணமகன் குதிரை வண்டி அல்லது அலங்கரிக்கப்பட்ட கார்களில் வருவது வழக்கம். ஆனால் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மணப்பெண் ஒருவர் சவப்பெட்டியில் வந்ததால் மணமகன் உள்பட திருமண வீட்டார் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 58 வயது பெண் ஜெனிபக்ளேப். இத்தனை வருடங்களாக திருமணம் செய்யாமல் இருந்த இவர் தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்து மணமகனையும் தேர்வு செய்தார். திருமணம் நடைபெறும் நாளும் குறிக்கப்பட்டது.

மணமகளுக்காக மணமகன் உள்பட திருமண வீட்டார் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் திருமணம் நடைபெறும் இடத்திற்கு ஒரு சவப்பெட்டையை நான்கு பேர் சேர்ந்து தூக்கிக்கொண்டு வந்தனர். இந்த சவப்பெட்டியை பார்த்ததும் மணமகன் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அந்த சவப்பெட்டியில் இருந்து மணமகள் ஜெனிபக்ளேப் சிரித்த முகத்துடன் எழுந்து வந்தார். பின்னர் இவர்களது திருமணம் இனிதே முடிந்தது.

இதுபற்றி ஜெனிபக்ளேப் கூறும்போது, எனது சகோதரர் எலும்புகூடு மற்றும் மனிதஉடல் தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறார். அவரை கவுரவிக்கும் வகையில் நான் திருமணத்துக்கு சவப்பெட்டியில் வந்தேன் என்று கூறினார்.

Leave a Reply