இலங்கையில் பதுங்கியுள்ள குமரன் பத்மநாபனை இந்தியா கொண்டு வந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று முன்னாள் காவல்துறை அதிகாரி தாக்கல் செய்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
முன்னாள் காவல்துறை உயரதிகாரி மோகன்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஒரு வழக்கில் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இலங்கை தமிழரான குமரன் பத்மநாபனிடம் இந்தியா முழு அளவில் விசாரணை செய்யவேண்டும் என்றும், அவருக்கு பொது மன்னிப்பு வழங்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இலங்கை ராணுவத்திற்கு அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.