தேவையான பொருட்கள்:
தக்காளி – 3-4
கத்தரிக்காய்- 4
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 1
பூண்டு – 5 பல்
இஞ்சி – சிறிய துண்டு
சாம்பார் பொடி – 1 ஸ்பூன்
மிளகு தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
கடுகு – 1ஃ2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கவும். கத்தரிக்காயை நீளமாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக ஆனதும் தக்காளி, கத்தரிக்காயை வதக்கவும்.
தேவையானால் 2 ஸ்பூன் தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்
காய் வெந்ததும் மஞ்சள் தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து பிரட்டி சிம்மில் வைக்கவும்.
அடுப்பில்லிருந்து எடுக்கும் சமயத்தில் மிளகு தூள் சேர்த்து பிரட்டி எடுக்கவும்.