தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – 8 (சிறியது)
பச்சை பட்டாணி – 1/4 கப் (வேக வைத்தது)
வெங்காயம் – 1/2 கப் (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (கீறியது)
புளி சாறு – 1/4 கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லி தூள் – 2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
பட்டை – 1
ஏலக்காய் – 3
கிராம்பு – 3
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து, தட்டுப் போட்டு மூடி வைத்து நன்கு வேக வைக்க வேண்டும். பின்பு அதில் புளி சாற்றை விட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகப் பொடி போட்டு நன்கு கிளற வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, மசாலாவை மூடி வைத்து 5-10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். மசாலாவானது ஓரளவு கெட்டியானதும், அதில் பச்சை பட்டாணி சேர்த்து சிறிது நேரம் கிளறி, பின்னர் அதனை இறக்கி, ஒரு முறை லேசாக மசித்து, இறுதியில் கொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்க வேண்டும். இப்போது சுவையான கத்திரிக்காய் கீமா மசாலா ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.