பிரிட்டன் பொதுத்தேர்தல்: தோல்வி முகத்தில் பிரதமர் தெரசா மே

பிரிட்டன் பொதுத்தேர்தல்: தோல்வி முகத்தில் பிரதமர் தெரசா மே

பிரிட்டன் நாட்டில் நேற்று நடந்த பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல்கட்ட முடிவுகளின்படி ஆளும் கன்சர்வேடிங் கட்சி பின்னணியில் உள்ளதால் பிரதமர் தெரசா மே அதிர்ச்சி அடைந்துள்ளார்/

பிரிட்டன் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் 2010வரை இருந்தது. ஆனால் பிரெக்ஸிட் உள்ளிட்ட பிரச்சனை காரணமாக முன்கூட்டியே தேர்தல் நடத்த தெரசா மே முடிவு செய்தார். அவருடைய முடிவு தவறானது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டி வருகின்றது

இதுவரை வெளியான தேர்தல் முடிவு தகவலின்படி கன்சர்வேடிவ் கட்சி 15 தொகுதிகளிலும், தொழிற்கட்சி 28 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. முன்னிலையை பொறுத்தவரையில் கன்சர்வேடிவ் கட்சி 314 தொகுதிகளிலும், தொழிற்கட்சி 266 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தெரசா மே பதவியை தக்க வைப்பார? அல்லது தொங்கு பாராளுமன்றம் அமையுமா? என்பது இன்னும் ஒருசில மணி நேரங்களில் தெரிந்து விடும்

Leave a Reply