1984 ஆம் ஆண்டு, பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசர்ஸ் நகரில் உள்ள பொற்கோவிலில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ப்ளூ ஸ்டார் நடவடிக்கையில் பிரிட்டனின் பங்கு இருந்ததாக அந்நாடு இன்று ஒப்புக்கொண்டுள்ளது.
1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் சீக்கியர்களுக்கு எதிரான பொற்கோவிலில் நடந்த ராணு நடவடிக்கையில் பிரிட்டனின் பங்கு இருந்ததாக சமீபத்தில் சில ஆவணங்கள் தெரிவித்தன. இதுகுறித்து விசாரணை செய்யுமாறு பிரிட்டன் உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணையின் முடிவு இன்று பிரிட்டன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் இந்திய ராணுவத்தின் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையில் பிரிட்டன் ராணுவம் சில அறிவுரைகளை கூறியது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ப்ளூ ஸ்டார் ஆபரேஷனின் விளைவாக பல சீக்கிய தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.