வாக்கெடுப்பு முடிவில் ஏமாற்றம். பதவி விலக பிரிட்டன் பிரதமர் முடிவு

வாக்கெடுப்பு முடிவில் ஏமாற்றம். பதவி விலக பிரிட்டன் பிரதமர் முடிவு

david cameroonஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று வாக்கெடுப்பின் முடிவுகள் வெளிவந்திருப்பாதல் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிவதை அவர் விரும்பவில்லை என்றும் இந்த முடிவு அவருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறக் கூடாது என்றும், அவ்வாறு நடந்தால், பிரிட்டனின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் பிரதமர் டேவிட் கேமரூன் தீவிர பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தின்படிதான் பொதுமக்கள் வாக்களிப்பார்கள் என்று பெரிதும் நம்பினார். ஆனால் பொது வாக்கெடுப்பின் முடிவு கேமரூனின் விருப்பத்துக்கு எதிராக முடிவுகளாக அமைந்துள்ளது. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் தான் பிரதமர் பதவியில் இருந்து விலக இருப்பபதாக அறிவித்துள்ளார்.

வாக்கெடுப்பு காரணமாக உலகெங்கிலும் பங்குச்சந்தை படுபாதாளத்தில் உள்ள நிலையில் பிரதமரின் ராஜினாமா அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply