பிரிட்டனில் தொங்கு பாராளுமன்றமா? யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் சிக்கல்

பிரிட்டனில் தொங்கு பாராளுமன்றமா? யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் சிக்கல்

பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில் தற்போது முடிவுகள் வெளிவர தொடங்கியுள்ளன. மொத்தமுள்ள 650 இடங்களில் 326 இடங்கள் பெற்றால் மட்டுமே மெஜாரிட்டி என்ற நிலையில் சற்று முன் வரை ஆளும் கன்சர்வேடிங் கட்சிக்கு 309 இடங்களும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 258 இடங்களும் கிடைத்துள்ளது. இதனால் அங்கு தொங்கு பாராளுமன்றம் அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஸ்காட்லாந்து தேசிய கட்சிக்கு 34 இடங்களும் ,லிபரல் டெமாகரட் கட்சிக்கு 12 இடங்களும் கிடைத்துள்ளதால் இந்த இரண்டு கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் கட்சியே ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்னும் ஒருசில தொகுதிகளுக்கு மட்டுமே முடிவுகள் வெளிவர வேண்டியதுள்ளதால் பிரிட்டனில் யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்த தகவல் இன்னும் ஒருசில மணி நேரத்தில் தெரியவரும்

Leave a Reply