ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்குமா? இன்னும் சில மணி நேரத்தில் முடிவு

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்குமா? இன்னும் சில மணி நேரத்தில் முடிவு

britainஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்க வேண்டுமா வேண்டாமா? என்பது குறித்த வாக்கெடுப்பு ஒன்று நேற்று பிரிட்டனில் நடைபெற்றது. பொதுமக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் வெளிவர தொடங்கியுள்ளது.

மொத்தம் உள்ள 382 ஓட்டு எண்ணும் மையங்களில் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 32 மையங்களின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளதாகவும் அதில் 46% மக்கள் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் எனவும், 54% மக்கள் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் இழுபறி நீடித்து வருவதாகவும் இறுதி முடிவு இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் உறுப்பினராக நீடிக்க ஆதரவாக வாக்களிக்கும்படி மக்களிடம் பிரசாரம் செய்து வந்தார். நேற்று தனது மனைவி சமந்தாவுடன் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

Leave a Reply