ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுமா?
1993ஆம் ஆண்டு உருவானது ஐரோப்பிய யூனியன். 28 நாடுகளை கொண்ட இந்த ஐரோப்பியனில் உள்ள நாடுகள் தங்கள் எல்லைகளை மாநில எல்லைகள் போல் வகுத்து ஒரே யூனியனாக ஒரே நாணயத்தை பின்பற்றி ஒற்றுமையாக இருந்து வந்தன. ஆனால் சமீபகாலமாக ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இந்த யூனியனில் இருந்து பிரியும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் மிக முக்கியமான நாடு பிரிட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய யூனியனில் தொடரலாமா? அல்லது பிரிந்துவிடலாமா? என்ற பொதுவாக்கெடுப்பு வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ளதாகவும், இந்த வாக்கெடுப்பின் முடிவை பொறுத்து பிரிட்டன் அரசு இதுகுறித்து முடிவு செய்யும் என்றும் கூறப்படுகிறது.
பிரிட்டனின் இந்த முடிவை ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி உலகின் பிறநாடுகளும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் பிரிட்டனில் உள்ள தேசியவாதிகள் இப்போதே ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிவதற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டனர்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிய முடிவு செய்ததற்கு கிரிஸ் நாட்டின் பொருளாதார நெருக்கடியும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் பிரிட்டனின் தொழிலதிபர்களுக்கு ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிய மனமில்லை. அவ்வாறு பிரிந்தால், இப்போது போல் ஸ்பெயின் முதல் போலந்து வரை பரந்து விரிந்த ஐரோப்பியச் சந்தையை அவர்கள் இழக்க நேரிடும்.
ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறுவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சரி சமமாகக் குரல்கள் ஒலித்து கொண்டு வருவதால் ஜூன் மாதம் நடைபெறவுள்ள பொதுவாக்கெடுப்பில் யூனியனில் தொடர்வதற்கே பெரும்பாலான மக்கள் வாக்களிப்பார்கள் என்று தற்போதைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. பிரிட்டன் எடுக்கப்போகும் முடிவை இந்தியாவும் கூர்ந்து கவனித்து வருகிறது.