415 கிலோ உடல் எடை கொண்ட பிரிட்டனின் குண்டு மனிதர் பரிதாப மரணம்.

[carousel ids=”66823,66824,66825,66826″]

415 கிலோ எடையுள்ள பிரிட்டனின் குண்டு மனிதர் என்ற பெயர் பெற்ற கார்ல் தாம்சன் நேற்று பரிதாபமாக அவருடைய வீட்டில் மரணம் அடைந்தார். அவருடைய வயது 33.

டீன் ஏஜ் பருவம் வரை நார்மலான உடல் எடையை கொண்டிருந்த கார்ல் தாம்சன் பின்னர் திடீரென உடல் எடை அதிகரிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரிப்பால் படுத்த படுக்கையான அவரை டாக்டர்கள் எச்சரித்தும், சரியான சிகிச்சை எடுத்து கொள்ளததால், கடந்த வாரம் அவருடைய எடை 415 கிலோவை தொட்டது. கடந்த ஒரு வாரமாக உடல்நலமின்றி காணப்பட்ட அவர் நேற்று மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கார்ல் தாம்சனின் உணவு பழக்க வழக்க முறையே அவரது உடை எடை அதிகரித்ததற்கு காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவருடைய தாயாரும் உடல் எடை அதிகரிப்பால்தான் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply