பிரிட்டன் பிரதமராக தெரசா மே பதவியேற்பு. நிதியமைச்சர் அதிரடி நீக்கம்
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பொதுமக்களின் வாக்கெடுப்பால் அதிருப்தி அடைந்த பிரிட்டன் பிரதமர் கேமரூன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இன்று புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்றார். 59 வயதான தெரசா மே இங்கிலாந்தின் 2-வது பெண் பிரதமர் ஆவார். இதற்கு முன்பு மார்க்கரெட் தாட்சர் முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பிரதமராக பதவியேற்ற தெரசா மே பின்னர் தனது புதிய அமைச்சரவை உறுப்பினர்களை நியமனம் செய்தார். அதில் உள்துறை மந்திரியாக ஆம்பர் ரூட் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். லண்டனின் முன்னாள் மேயரும், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று வலியுறுத்தி பிரசாரம் செய்தவருமான, போரிஸ் ஜான்சன் புதிய அமைச்சரவையில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் பிரிட்டன் நிதியமைச்சராக இருந்த ஜார்ஜ் ஆஸ்போர்ன் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக, கேமரூன் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக இருந்த பிலிப் ஹேமண்ட் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மைக்கேல் பாலோன் பாதுகாப்பு அமைச்சராகத் தொடர்கிறார். லியாம் ஃபாக்ஸ் சர்வதேச வர்த்தக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டேவிட் டேவிஸ், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டியது தொடர்பான விஷயங்களுக்காகப் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
Britain’s new PM and ministry sworned