11 வயதில் கர்ப்பம். 13 வயதில் பள்ளிப்படிப்பை தொடர்ந்த பிரிட்டன் சிறுமி

11 வயதில் கர்ப்பம். 13 வயதில் பள்ளிப்படிப்பை தொடர்ந்த பிரிட்டன் சிறுமி

[2GM - 4]  SUN/PAGES/NEWS... 16/04/14பிரிட்டன் நாட்டில் 11 வயதில் கர்ப்பமாகி குழந்தை பெற்ற சிறுமி, தற்போது மீண்டும் பள்ளியில் சேர்ந்துள்ளார். அவருடைய தற்போதைய வயது 13.

பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒரு சிறுமி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கர்ப்பமாகி குழந்தை பெற்றார். அப்போது அவருக்கு வயது 11. பிரிட்டன் நாட்டின் மிக இளவயது தாய் என்ற பெயருடன் வாழ்ந்த அவர் இரண்டு வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் பள்ளியில் சேர்ந்துள்ளார். அவருடைய 28 வயது தாய், அந்த குழந்தையை கவனித்து வருகிறாஅர்.

11 வயது தாய்க்கு பிறந்த குழந்தையின் தந்தைக்கு வயது 15 என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஒரே பள்ளியில் படித்தபோது காதலித்து நெருக்கமாக பழகியதால் தற்போது ஒரு குழந்தைக்கு பெற்றோராகி உள்ளனர். இருவருமே பள்ளியில் நன்கு படிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவயதிலேயே பெற்றோர்களான இவர்களின் எதிர்காலம் கருதி பள்ளி நிர்வாகம் அவர்களது பெயர்களை தெரிவிக்க மறுத்துவிட்டது.

Leave a Reply