ரஜினியுடன் ஜோடி சேரும் லண்டன் நடிகை. லிங்காவில் 3 ஹீரோயின்கள்?

BosQ_UxCEAEl546சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் சோனாக்ஷி சின்ஹா நடித்து வரும் வேளையில் மூன்றாவதாக லண்டன் நடிகை ஒருவரும் ஜோடி சேருகிறார்.

லாரன் ஜே. இர்வின் என்ற லண்டன் நடிகை ஏற்கனவே பிரிட்டன் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்தவர்.

ரஜினி நடித்து வரும் லிங்கா படத்தில் சுதந்திரத்திற்கு முந்தைய பிளாஷ்பேக் காட்சிகளில் அவருக்கு ஜோடியாக லாரன் ஜே.இர்வின் நடித்து வருகிறார்.

படத்தில் பத்து நிமிடங்கள் மட்டுமே வரும் காட்சிகள் இருந்தாலும், இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடித்ததை தான் பெருமையாக கருதுவதாக லாரன் கூறியுள்ளார்.

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் சுறுசுறுப்பு மற்றும் திட்டமிட்ட படப்பிடிப்புத்திறனை தான் இதுவரை ஹாலிவுட் இயக்குனர்களிடம் கூட பார்த்ததில்லை என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

மைசூரில் நடந்த படப்பிடிப்பில் ரஜினியுடன் நடித்து முடித்த லாரன், நேற்று லண்டன் திரும்பினார்.

Leave a Reply