தமிழக மீனவர்களை விடுவிக்க ரூ.5 லட்சம் அபராதம்: இங்கிலாந்து கடற்படை உத்தரவு

தமிழக மீனவர்களை விடுவிக்க ரூ.5 லட்சம் அபராதம்: இங்கிலாந்து கடற்படை உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மற்றும் இரவிபுத்தன்துறையைச் சேர்ந்த 15 மீனவர்கள், கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த 17 மீனவர்களை இங்கிலாந்து கடற்படையினர், தங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டீகோ கார்சியா தீவு கடல் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி சமீபத்தில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும், டீகோகார்சியா தீவில் சிறை வைத்துள்ள இங்கிலாந்து கடற்படை மீனவர்களை விடுவிக்க ரூ.5 லட்சம் அபராதம் கட்ட உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் அபாரத தொகையை செலுத்தாவிட்டால், மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து கூறிய மீனவர்களின் உறவினர்கள் அபராத தொகையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply