பிரிட்டனில் கடந்த வாரம் முதல் பலத்த மழை பெய்ததால் லண்டன் உள்பட பல நகரங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்து ஏராளமான பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் பிரிட்டன் முழுவதும் வெள்ள மீட்புப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. பிரிட்டன் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர்களும் களத்தில் இறங்கி வெள்ள மீட்புப்பணிகளை கவனித்து வருகின்றனர். வெள்ள நீரை தடுக்கும் மணல் மூட்டைகளை அவர்கள் சுமந்து மீட்புப்பணியில் ஈடுபடுவோர்களுக்கு உதவி செய்கின்றனர். இளவரசர்களே மீட்புப்பணியில் ஈடுபட்டிருப்பதால் மற்றவர்களும் மிக ஆர்வத்தோடு மீட்புப்பணிகளுக்கு உதவி புரிந்து வருகின்றனர்.
பிரிட்டனில் கடந்த 1766ஆம் ஆண்டிற்கு பின்னர் மிக அதிக அளவு மழை பெய்தது இந்த ஆண்டுதான் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அங்கு மணிக்கு 160 கிமீ வேகத்தில் புயற்காற்றும் அடித்ததால் பல மரங்கல் வேறோடு சாய்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து பெருமளவில் பாதிப்பு அடைந்துள்ளது.
[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/Mr0ZGX” standard=”http://www.youtube.com/v/3A9WbPykDaM?fs=1″ vars=”ytid=3A9WbPykDaM&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep3996″ /]