[carousel ids=”67092,67093″]
எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் பரவாமல் இருப்பதற்காக காண்டம் அணியுங்கள் என அரசும் தனியார் அமைப்புகளும் தொடர்ந்து விளம்பரம் செய்து வரும் நிலையில் காண்டம் அணிந்தால் ஒருவரிடம் என்னவிதமான பாலியல் நோய்கள் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மூன்று சிறுவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 13வயது முயாஸ் நவாஸ், 14 வயது டேன்யால் அலி, 14வயது சிராஹ் ஷா ஆகிய மூன்று சிறுவர்கள் இணைந்து புதுவகையான காண்டம் ஒன்றை தயார் செய்துள்ளனர். இந்த காண்டத்தை பாலியல் நோய் உள்ளவர்கள் அணிந்தால் அவர்களை தாக்கியிருக்கும் வைரஸ்களின் தன்மைகளுக்கு ஏற்ப உடனே இந்த காண்டம் நிறம் மாறிவிடும். மஞ்சள், பிங்க், பர்ப்பிள் என நிறம் மாறுவதை அடுத்து அந்த நபருக்கு என்ன நோய் இருக்கின்றது என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். இந்த புதுவித காண்டம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த தலைமுறையினர் பால்வினை நோய்களில் சிக்காமல் இருப்பதற்கு இந்த கண்டுபிடிப்பு பெரிதும் உதவும் என கூறியுள்ள இந்த மூன்று சிறுவர்களை இங்கிலாநது அரசு பாராட்டி கெளரவித்துள்ளது. இவர்களின் கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் அளித்துள்ள இங்கிலாந்து அரசு, தொடர்ந்து அவர்களுடைய ஆராய்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் கூறியுள்ளது.