பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒரு பெண் புத்தரின் டாட்டூவை கையில் வரைந்திருந்த காரணத்தினால், புத்தரை அவமானப்படுத்தியதாக கருதி இலங்கை அரசு அவரை கைது செய்துள்ளது.
பிரிட்ட்டன் நாட்டை சேர்ந்த 37 வயது மைக்கேல் கோலமன் என்ற பெண், நேற்று இலங்கையில் தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். அவரை பரிசோதித்த விமான நிலைய அதிகாரிகள், அவரது கையில் இருந்த புத்தரின் டாட்டூவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
புத்தரை புனிதமான கடவுளாக கருதி வரும் இலங்கை மக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக கருதி அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவர் மீதான புகாரை விசாரணை செய்து அவரை நாடு கடத்த உத்தரவிட்டது.
இந்த சம்பவத்தினால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மைக்கேல் கோலமன் நாடு கடத்தப்பட்டதை பிரிட்டன் அரசு கண்டித்துள்ளது.