பிராக்கோலி புலாவ்

301591d3-fdb5-4bde-9b48-a12b327970cc_S_secvpf

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 2 கப்,

பட்டை, கிராம்பு – தலா 2,

வெங்காயம் – 2,

பிராக்கோலி – 1 

நெய் – 2 டேபிள்ஸ்பூன்,

தண்ணீர் – 4 கப்,

உப்பு, மிளகுத்தூள் -தேவைக்கேற்ப,

சீரகம் – 1 டீஸ்பூன்.

செய்முறை :

• பிராக்கோலி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• அரிசியைக் களைந்து, போதுமான  தண்ணீர் விட்டு, அரை மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும்.

• பிராக்கோலியை சுத்தம் செய்து 5 நிமிடங்களுக்கு வேக வைத்து, தண்ணீரை வடிக்கவும்.

• கடாயை சூடாக்கி, நெய்யில் பட்டை, கிராம்பு, சீரகம் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி வேக வைத்த பிராக்கோலியை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

• ஊற வைத்த அரிசியும், தண்ணீரும் சேர்க்கவும் (தண்ணீர் சேர்க்கும் போது, பிராக்கோலி வேக வைக்க சேர்த்த தண்ணீரையும் நினைவில் வைத்திருந்து கவனமாகச் சேர்க்கவும்).

• உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து, மூடி வைத்து, முழுக்க வெந்ததும், சூடாகப் பரிமாறவும்.

Leave a Reply