பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு 6 மாதம் மட்டுமே தண்டனையா? கொந்தளிக்கும் அமெரிக்க மக்கள்

பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு 6 மாதம் மட்டுமே தண்டனையா? கொந்தளிக்கும் அமெரிக்க மக்கள்
brock
அமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை பலாத்காரம் செய்த கொடியவனுக்கு வெறும் ஆறு மாதங்கள் மட்டுமே சிறை தண்டனை கொடுத்த நீதிபதியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுமார் ஒரு மில்லியன் மக்கள் கையெழுத்திட்டு புகார் ஒன்றை அமெரிக்க அதிபருக்கு அனுப்பியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழத்தில் சுயநினைவின்றி இருந்த இளம் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்திய புரோக் டர்னர் என்ற கொடிய நபருக்கு ஆறுமாத சிறைதண்டனை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தேசிய அளவில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்டவரால் வெளியிடப்பட்ட உணர்ச்சிமிகுந்த அறிக்கை ஒன்று படிக்கப்பட்டது, இந்த கோபத்திற்கு ஓரளவு காரணமாகும்.

கௌரவமிக்க பல்கலைக்கழகத்தில் வெள்ளை இன தடகள நட்சத்திரம் என்பதால் டர்னர் மிதமான தண்டனையோடு விடப்பட்டிருக்கிறார் என்று சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த வழக்கை மீண்டும் வேறு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply