கண் பரிசோதகர் துணை மருத்துவப் படிப்பு: முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம்

images (19)

கண் பரிசோதகருக்கான துணை மருத்துவப் படிப்பு சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவ நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் இந்தப் படிப்பு தொடங்கப்படுவது இதுவே முதல் முறையாகயாகும்.

“பி.எஸ்சி. ஆப்டோமெட்ரி’ படிப்புக்கான அறிமுக நிகழ்ச்சி சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது: இந்தப் படிப்பானது அரசு மருத்துவ நிறுவனங்களில் புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் கண் சம்பந்தமான பயிற்சிகள் அனைத்தும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

எழும்பூர் கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் நமிதா புவனேஸ்வரி கூறியதாவது:

இந்த நிறுவனத்தில் 1962-ஆம் ஆண்டில் இருந்து கண் பரிசோதகருக்கான இரண்டு ஆண்டுகால பட்டயப் படிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் படிப்பில் 30 இடங்கள் உள்ளன.

இப்போது தொடங்கப்பட்டுள்ள பட்டப் படிப்பில் மூன்று ஆண்டுகள் பாடப் பயிற்சியும், ஓராண்டு செய்முறைப் பயிற்சியும் அளிக்கப்படும். இந்தப் படிப்புக்கு 20 இடங்கள் உள்ளன. நடந்து முடிந்த கலந்தாய்வில் இந்த இடங்கள் அனைத்தும் பூர்த்தியாகின என்று அவர் தெரிவித்தார்.

சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply