BSNL இணையதள கட்டணங்கள் திடீர் உயர்வு.

BSNL நிறுவனத்தின் இணையதள சேவை, ஒன் இந்தியா பிளான் மற்றும் பொது திட்டங்களுக்கான மாதாந்திர நிரந்தர கட்டணத்தை  இன்று முதல் அதிரடியாக உயர்த்தியுள்ளது.

இதன்படி, BBG 250 திட்டத்தின் கட்டணத்தை ரூ.250ல் இருந்து ரூ.275 ஆகவும், BBG FN காம்போ 600 திட்டத்தின் கட்டணத்தை ரூ.660ல் இருந்து ரூ.630 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

BBG SPEED COMBO 2799 திட்டத்தின் கட்டணத்தை ரூ.2,799ல் இருந்து ரூ.2,949 ஆகவும், BBG  SUPER SPEED COMBO 3699 திட்டத்தின் கட்டணத்தை ரூ.3,699 ல் இருந்து 3,899 ஆகவும், BBG  SUPER SPEED COMBO 4999 திட்டத்தின் கட்டணத்தை ரூ.4,999 ல் இருந்து ரூ.5,249 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

BBG  SUPER SPEED 6999 திட்டத்தின் கட்டணத்தை ரூ.6,999ல் இருந்து ரூ.7,349 ஆகவும், BB PCO  400 திட்டத்தின் கட்டணத்தை ரூ.400ல் இருந்து ரூ.425 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், ஒன் இந்தியா பிளான் திட்டத்தின் கட்டணத்தை ரூ.180ல் இருந்து ரூ.195 ஆகவும், ஜெனரால் பிளான் திட்டத்தின் கட்டணத்தை ரூ.180ல் இருந்து ரூ.190 ஆகவும் பிஎஸ்என்எல் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

Leave a Reply