கூகுள் மற்றும் யாஹு இமெயிலுக்கு போட்டியாக இந்தியாவின் பி.எஸ்.என்.எல் புதிய இமெயில் சேவை ஒன்றை நாளை முதல் தொடங்க உள்ளது.
இந்திய தொலைத்தொடர்பில் பல புதுமைகளை செய்த பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது இமெயில் சேவையிலும் இறங்கியுள்ளது. நாளை மே 17ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள இந்த இமெயில் சேவையின் தொழில்நுட்பத்தை ஜெய்ப்பூரைச் சேர்ந்த ‘டேட்டா இன்போசிஸ்’ ஐ.டி. நிறுவனம் வடிவமைத்து கொடுத்துள்ளது.
பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தவுள்ள இந்த புதிய இமெயில் சேவையில் மற்ற இமெயில் சேவைகளில் இல்லாத புதிய வசதிகள் உள்ளது என்றும், இதை பயன்படுத்துவது மிகவும் எளிது என்றும் ‘டேட்டா இன்போசிஸ் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாம் ஒரு இமெயிலை தயார் செய்து வைத்துவிட்டு நாம் விரும்பும் நேரத்தில் மெயிலை அனுப்பும் வசதி இதில் உள்ளது. நாள் ஒன்றுக்கு ஒருவர் 5000 இமெயில்கள் வரை அனுப்பலாம். ஆனால் இந்த இமெயிலை பி.எஸ்.என்.எல் இண்டர்நெட் இணைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். மற்ற இண்டர்நெட் இணைப்பு உள்ளவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் மற்ற இணையதள இணைப்பு பெற்றவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்