ரூ.613 கோடியை சேமித்தது பிஎஸ்என்எல்
பல்வேறு எரிசக்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட தன் மூலம் 613 கோடி ரூபாயை சேமித்துள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இதன் மூலம் அதிக அளவில் மின் சாரம் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தி லிருந்து 2016 மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் பல்வேறு ஆற்றல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் இந்த தொகை சேமிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிசக்தி நுகர்வை குறைப்ப தற்காக கூலிங் தொழில்நுட்பம், பிஇஇ சான்று பெற்ற பொருட்களை பயன்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருப்ப தாக பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது.