அரச பொறுப்பில் இருந்து விலகல். பிரிட்டன் இளவரசரின் திடீர் அறிவிப்பு

அரச பொறுப்பில் இருந்து விலகல். பிரிட்டன் இளவரசரின் திடீர் அறிவிப்பு

பிரிட்டன் நாட்டின் அரசியாக இரண்டாம் எலிசபெத் அவர்களின் கணவரும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் தலைவருமான இளவரசர் பிலிப் அரச பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இளவரசர் பிலிப் அவர்களுக்கு தற்போது 95 வயது ஆவதால் வயது முதிர்வு காரணமாக இந்த பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் இருப்பினும் எலிசபெத் ராணி அவர்கள் தொடர்ந்து அரசியாக இருந்து அரச பணிகளில் ஈடுபடுவார் என்றும் பக்கிங்காம் அரண்மனை செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.

உலகம் முழுவதிலும் உள்ள 780 தொண்டு அமைப்புகளின் தலைவராக உள்ள பிலிப், வயது முதிர்வு காரணமாக அவ்வமைப்புகளின் நிகழ்ச்சிகளில் இனியும் கலந்து கொள்ள இயலாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

பிலிப் பதவி விலகியதை அடுத்து இந்த பதவிக்கு அந்த பதவிக்கு அரச குடும்பத்திலிருந்து யார் வருவார்கள்? என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. 18 வயதில் ராணுவத்தில் இணைந்த இளவரசர் பிலிப் படிப்படியாக முன்னேறி அரச பொறுப்புகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply